(UTV|கொழும்பு)- அமெரிக்கா மற்றும் தலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. அங்கு உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்த நாட்டு அரசின் உதவியோடு தலிபான்களுடன் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில், மத்திய கிழக்கு நாடான கட்டாரில் அமெரிக்கா மற்றும் தலிபான் அமைப்பினர் இடையே அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இதன் மூலம் 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வருகிறது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து, அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைகள் அனைத்தையும் விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.