கேளிக்கை

மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் விஜய்

(UTV|இந்தியா )- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் மாஸ்டர் படத்தில் நடித்து வரும் விஜய், மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘மாஸ்டர்‘ படத்தில் விஜய் நடித்து வருகிறார். மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி சாந்தனு, நாசர், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர்.

படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 65-வது படத்தின் இயக்குனர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மாஸ்டர் படப்பிடிப்பில் லோகேஷ் கனகராஜ் சொன்ன மற்றொரு கதையும் விஜய்க்கு பிடித்துள்ளதாகவும், அடுத்து அந்த படத்தில் நடிக்க அவர் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related posts

ஹிருத்திக் ரோ‌ஷனுடன் யாரும் பணியாற்றக்கூடாது

ஜூலியை களமிறக்கும் அனிருத்

பிரச்சினையால் விவாகரத்து வரை சென்ற நடிகர் விஜய் சேதுபதி…