விளையாட்டு

சவூதியில் முதல்முறையாக பெண்கள் கால்பந்து போட்டி

(UTV|கொழும்பு)- சவூதி அரேபியாவில் முதல்முறையாக பெண்கள் கால்பந்து லீக் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக கடுமையான விதிகள் கொண்ட நாடாக கருதப்படும் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சமீபத்தில் அந்நாட்டில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்தினார்.

அந்தவகையில், அதன் ஒரு பகுதியாக இந்த லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. பெண்களை விளையாட்டில் ஊக்குவிப்பதே இந்த லீக் போட்டிகளின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த லீக் போட்டிகள் தலைநகர் ரியாத்திலும் மற்றும் இரு பிற நகரங்களிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை கிரிக்கட் அணிக்கு புதிய முகாமையாளர் நியமனம்!

சர்வதேச கிக் பொக்சிங்; இலங்கைக்கு 11 தங்கம்

ஐசிசி உடன் கலந்துரையாடிய பின்னர் தேர்தல் நடத்தப்படும்