(UTV|கொழும்பு)- எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோருக்கு இடையில் இன்று(26) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
2019 ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியல் மற்றும் 2020 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியல் என்பனவற்றில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.