(UTV|கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 65 பேரில் 63 பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர் இதன்போது அவர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த 65 பேரும் தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹசிமின் நுவரெலிய மற்றும் அம்பாந்தோட்டை முகாம்களில் பயற்சி பெற்றவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.