உள்நாடுசூடான செய்திகள் 1

தினேஷ் குணவர்தன உள்ளிட்ட குழுவினர் ஜெனீவாவுக்கு

(UTV|கொழும்பு) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்க வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட குழுவினர் இன்று(25) ஜெனீவாவுக்கு பயணமாகவுள்ளனர்.

மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டரஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் ஆகியோர் தலைமையில் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று(24) ஆரம்பமானது.

வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க ஆகியோர் இலங்கை சார்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கை இணை அனுசரணை வழங்கிய 30/1 மற்றும் 40/1 ஆகிய பிரேரணைகளிலிருந்து விலகும் தீர்மானத்தை வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பேரவைக்கு நாளை(25) அறிவிக்கவுள்ளார்.

Related posts

தேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்

தவறான மருந்து  சீட்டால் பரிதாபாமக உயிரிழந்த குழந்தை

CIDக்கு அச்சுறுத்திய கோட்டா: வழக்கு தாக்கல் செய்யும் ரிஷாட்