உலகம்

நாளை கையெழுத்தாகவுள்ள முக்கிய ஒப்பந்தங்கள் – ட்ரம்ப்

(UTV|இந்தியா) – இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு அமெரிக்கா நவீன ஆயுதங்களை வழங்கும் வகையில், சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், குஜராத் மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மைதானத்திலிருந்து ட்ரம்ப் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு நவீன ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளோம். பாதுகாப்பு துறையில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாக உள்ளன. இராணுவ உலங்கு வானூர்திகள் மற்றும் ஆயுதங்களை இந்தியாவிற்கு தர இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட உள்ளன என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

Related posts

இன்று முதல் Sputnik V கொரோனா தடுப்பூசி திட்டம் ஆரம்பம்

காசாவில் போரை நிறுத்த இஸ்ரேல் தீர்மானம்!

27 இந்திய மீனவர்களை விடுதலை செய்யகே கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்!