உள்நாடு

அதிவேக வீதி பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்

(UTV|கொழும்பு) – தெற்கு அதிவேக வீதியின் ஊடாக ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு வரையான பேருந்து சேவை இன்று(24) முதல் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கமைவாக ஹம்பாந்தோட்டையில் இருந்து கோட்டை வரையிலான பேரூந்து கட்டணம் 880 ரூபா எனவும் தங்காலையில் இருந்து கோட்டை வரையிலான பேரூந்து கட்டணம் 680 ரூபாய் ஆகும். ஹம்பாந்தோட்டையில் இருந்து மாக்கும்புர வரையிலான பேருந்து கட்டணம் 810 ரூபாய் எனவும் தங்காலையில் இருந்து மாக்கும்புர வரையிலான பேருந்து கட்டணம் 610 ரோபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று திறக்கப்பட்ட மாத்தறை – ஹம்பாந்தோட்டை நெடுஞ்சாலையில் புதிதாக 10 சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணத்தில் மாற்றம் இல்லை

15 ஆம் திகதி ஜனாதிபதி அநுர இந்தியாவுக்கு விஜயம்

editor

நுவரெலியாவில் தொடர்மழை – வெள்ளத்தில் மூழ்கிய சிறுவர் பூங்கா

editor