(UTV|வவுனியா ) -வவுனியா – ஓமந்தை – பன்றிக்கெய்தகுளம் ஏ 9 பிரதான வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன்போது பேருந்தும் வேனும் தீ பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்து வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் பெண்ணொருவரும் 4 ஆண்களும் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்