உலகம்சூடான செய்திகள் 1

இத்தாலியில் கொவிட் – 19; முதியவர் பலி

(UTVNEWS | ITALY) –ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொவிட் – 19 தொற்று காரணமாக 78 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொவிட் – 19 தொற்று சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கும் பரவிவருகின்றது.

அந்த வகையில் ஹொங்கொங், ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், மக்காவ், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 28ற்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொவிட் – 19 தொற்றினால் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். 78 வயதான முதியவர் ஒருவர் வைரஸ் தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து இத்தாலி சுகாதார அமைச்சர் ராபார்ட்டோ கூறும்போது, “வெனேடோ பகுதியில் உள்ள வடக்கு மண்டலத்தை சேர்ந்த 78 வயதான முதியவர் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்” என்று கூறினார்.

கொரோனா வைரஸ் (கொவிட்)பீதி காரணமாக வடக்குமாகாணத்தில் உள்ள 10 நகரங்களில் உள்ள பொது இடங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் விளையாட்டு நிகழ்ச்சி மற்றும் மத கூட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

Related posts

மத்திய செயற்குழு கூட்டங்களில் தாம் இனி கலந்துக் கொள்ளப் போவதில்லை

உணவுப் பொருட்களை கைகளால் தொட்டு ​விற்பதற்கு தடை

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு