(UTV|கொழும்பு) – நாட்டிற்கு இறக்குமதியாகும் மருந்துகளின் தரத்தினை பரிசோதனை செய்வதற்காக மருந்து ஒழுங்குமுறை ஆய்வகம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று(20) பிற்பகல் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.