உலகம்

மசூதியில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தின் சந்தேக நபர் கைது

(UTV|இலண்டன்) – மத்திய இலண்டன் ரீஜண்ட் பார்க் அருகிலுள்ள உள்ள மசூதியில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தினை தொடர்ந்து சந்தேக நபர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு , குறித்த சம்பவத்தினை பொலிஸார் பயங்கரவாத செயலாக இருக்க வாய்ப்பில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

சம்பவத்தில் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை , ஆனாலும் 70 வயதுடைய நபர் ஒருவர் காயங்களுக்குள்ளானதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளதோடு, அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை காயமடைந்த நபர் மசூதியில் இடம்பெறும் பிரார்த்தனைகளுக்கு அழைப்பு விடுபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

காசா பகுதிக்கு எகிப்தின் உதவிகள்!

இஸ்தான்புல் விமானம் விபத்து ; மூவர் பலி, 179 பேர் காயம்

உலகளவில் அதிகரிக்கும் கொரோனா பதிப்பு