விளையாட்டு

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் இடைநீக்கம்

(UTV|பாகிஸ்தான் ) – பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் உமர் அக்மலை, கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்பதில் இருந்து உடனடியாக இடைநீக்கம் செய்வதாக அந்த நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அவரை பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) போட்டியின் போது ஸ்பாட்பிக்சிங் என்ற சூதாட்டத்தில் ஈடுபட வைக்க சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் அணுகி இருக்கிறார். ஆனால் இந்த விஷயத்தை கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு பிரிவின் கவனத்துக்கு கொண்டு செல்ல உமர் அக்மல் தவறி விட்டார்.

இதனாலேயே அவர் மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உமர் அக்மல் பாகிஸ்தான் அணிக்காக 16 டெஸ்ட், 121 ஒரு நாள் போட்டி மற்றும் 84 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகக் கிண்ண போட்டிக்கு தசுன் ஷனக தலைமை தாங்குவார்!

டோனிக்கு நெருக்கடி – மேற்கிந்தியத்தீவு தொடரிலிருந்து நீக்கம்

நான்காவது போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி