உலகம்

ஜப்பான் கப்பலில் 2 பேர் பலி

(UTV|ஜப்பான்) – ஜப்பான் துறைமுகத்தில் உள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த 2 பயணிகள் கொவிட் 19 வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்

ஹாங்காங்கில் இருந்து ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்துக்கு வந்த டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் பலர் கொவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து கப்பலில் இருந்த 3700-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இதில் கொவிட் 19 வைரஸ் தொற்றால் 624 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது

Related posts

அனைத்து சமூக ஊடகங்களுக்கும் தடை

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

editor

ரஷ்யாவின் பல பகுதிகளில் அவசர நிலை.