உள்நாடு

விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் பிரச்சினைகள் – இன்று கலந்துரையாடல்

(UTV|கொழும்பு) – விசேட தேவையுடைய இராணுவத்தினரின் ஓய்வூதியப் பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்று(20) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது, விசேட தேவையுடைய இராணுவத்தினருக்கு வழங்கப்படவுள்ள சலுகைகள் குறித்து அமைச்சரவை தீர்மானமொன்றை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் ஜனாதிபதி குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன மற்றும் முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் குழுவுக்கு ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தொடர்ந்தும் நாடு திரும்பும் இலங்கையர்கள்

பயணக்கட்டுப்பாடு திங்கள் நீக்கப்படின், மாகாணங்களுக்கு இடையில் பொதுப் போக்குவரத்து

தேர்தல் சட்டத்தை மீறிய 22 பேர் கைது

editor