(UTV|சீனா) – சீனாவில் வேகமாக பரவி வரும் கொவிட் – 19 தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,123 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் வூபேய் மாகாணத்தில் 108 புதிய உயிரிழப்புக்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவாகியுள்ளன.
சீனாவில் இதுவரையில் 75,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு உலகம் முழுவதும் 75,642 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வூஹான் பகுதியில் புதிதாக கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளான 653 அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.