விளையாட்டு

சர்வதேச கிரிக்கட் தொடரை 4 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்த தீர்மானம்

(UTV|துபாய்) – சர்வதேச இருபதுக்கு 20 சம்பியன்ஷிப் தொடரை 4 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு தொடக்கம் 2031 ஆம் ஆண்டு வரையான தொலைக்காட்சி உரிமத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடரில் 10 அணிகள் விளையாடவுள்ளதுடன் 48 போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

அதன்படி, 2024 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் இருபதுக்கு 20 சம்பியன்ஷிப் தொடரையும் 2025 மற்றும் 2029 ஆம் ஆண்டுகளில் ஒருநாள் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரையும் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐதரபாத் அணியை எதிர்க்கொண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றியை ருசித்தது…

தென்னாபிரிக்க அணியுடனான இருபதுக்கு – 20 இலங்கை குழாம் அறிவிப்பு

உலக கிண்ண கால்பந்து முடிவுகளை கணிக்க இருக்கும் பூனை