விளையாட்டு

இலங்கை அணி வீரர்களுக்கு டெங்கு

(UTVNEWS | COLOMBO) –இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் நிரோசன் டிக்வெல்ல மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் காரணமாக எதிர்வரும் ஒருநாள் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சகலதுறைவீரர் காமின்டு மெண்டிஸ், இன்றைய பயிற்சி போட்டியை தவறவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதால் இலங்கை அணிக்கு பாரிய சவாலாக உள்ளது.

இதுகுறித்து கிரிக்கெட் விமசகர்கள் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியானது 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

Related posts

கப்திலை பின்னுக்கு தள்ளிய கோஹ்லி

தேசிய இளைஞர் படையணி கிரிக்கட் போட்டியில் வடமாகாண அணி சாதனை

பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்