உள்நாடு

அரசியல் பழிவாங்கல் – இன்று முதல் சாட்சியம் பெறும் நடவடிக்கை ஆரம்பம் 

(UTV|கொழும்பு) – அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இன்று(17) முதல் முறைப்பாடுகள் தொடர்பில் சாட்சியங்களை பெறும் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளது.

2015ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு நவம்பர் 16ம் திகதி வரையில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்ந்து 06 மாத காலத்தினுள் அறிக்கை ஒன்றினை, சமர்பிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, குறித்த ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று வருவதோடு, எதிர்வரும் 20ம் திகதி வரையில் முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எரிபொருள் விலைகளில் மாற்றம் இல்லை

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்

சுதந்திரம் யாருக்கோ என எண்ணுமளவில் சிறுபான்மையினர் : ரிஷாத்