உலகம்சூடான செய்திகள் 1

அமெரிக்க தூதரகத்தின் மீது ஈராக்கில் ரொக்கெட் தாக்குதல்

(UTVNEWS | IRAQ) – ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ரொக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈராக்கிலுள்ள 2 அமெரிக்க இராணுவ நிலைகள் மீது ஈரான் கடந்த மாதம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் பலியானதாக ஈரான் அறிவித்தபோதிலும் அமெரிக்கா அதை மறுத்துவிட்டது. இந்நிலையில், பாக்தாத்திலுள்ள அமெரிக்க தூதரகம் அருகே இன்று காலை ஏராளமான ரொக்கெட்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை யார் நடத்தினர் என்பது குறித்தோ, அத்தாக்குதலில் நேரிட்ட சேதம் குறித்தோ, எத்தனை ராக்கெட்டுகள் வீசப்பட்டன என்பது குறித்தோ தகவல் இல்லை.

Related posts

அமைச்சர்களின் அரச வாகனம், வாசஸ்தலங்களை மீள ஒப்படைக்க வேண்டும்

இலங்கை-சீஷெல்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

ஈரான் சனநெரிசலில் 35 பேர் பலி