வணிகம்

பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரிக்கிறது

(UTV|கொழும்பு) – பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதி தடை செய்யப்பட்டதால், கடந்த வருடம் இலங்கை சந்தைகளில் பெரிய வெங்காய விநியோகம் குறைவடைந்திருந்தது.

எனினும் பாகிஸ்தான், துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், துருக்கி, நெதர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயங்களை கொள்வனவு செய்வதற்கு நுகர்வோர் விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்வதற்கு இறக்குமதியாளர்கள் முன்வருவதில் தயங்குவதாலேயே மீண்டும் வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

சீனி உப்புக்கான வரிகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும்

தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி

அடிப்படை சம்பளம் 700 ரூபாவாக நிர்ணயம்