உலகம்

நிர்பயா வழக்கு 17ம் திகதி வரை  ஒத்திவைப்பு

(UTV|இந்தியா) – நிர்பயா கொலைக் குற்றவாளிகளைத் தூக்கிலிடும் திகதியை அறிவிக்கக்கோரிய வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வரும் 17ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.

குறித்த வழக்கு, நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வழக்கில் தற்போது உத்தரவு பிறப்பித்தால் மேலும் சட்டச் சிக்கல்கள் உருவாகும் என நீதிபதிகள் தெரிவித்ததுடன் வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் கடந்த முதலாம் திகதி தூக்கிலிடுவதற்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால் தண்டனையை நிறைவேற்றுவதில் சட்ட ரீதியான தடை உருவானது.

இந்நிலையில் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய திகதியை அறிவிக்கக்கோரி திகார் சிறை நிர்வாகம் சார்பில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் – வலியுற்றுத்தும் நாடுகள்

எல் சால்வடார் பாராளுமன்றத்திற்குள் திடீரென நுழைந்த இராணுவம்

இராஜினாமாவுக்கு தயாராகும் போரிஸ்