உலகம்

கொரோனா  என சந்தேகிக்கப்பட்ட நபர் சுட்டுக்கொலை

(UTV|வடகொரியா) – வடகொரியாவில் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நபர் பொது குளியல் அறைக்கு சென்றதால் வைரஸ் பரவாமல் இருக்க அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுருத்தலாக விளங்கிவருகிறது.

இந்த வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், சர்வாதிகார ஆட்சிக்கு பெயர்போன வடகொரியா கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகத்திற்கு உள்ளான நபரை சுட்டுக்கொன்றுள்ளது.

வடகொரியா நாட்டை சேர்ந்த வர்த்தக அதிகாரி ஒருவர் சமீபத்தில் சீனாவுக்கு சென்று சொந்த நாடு திரும்பியுள்ளார். இதனால் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகித்த வடகொரிய அதிகாரிகள் அவரை தனிமைபடுத்தி தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தி இருந்தனர்.

இதற்கிடையில், அந்த நபர் அந்நாட்டின் பொது இடத்தில் உள்ள குளியல் அறைக்கு சென்றுள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். இதையடுத்து உயர் அதிகாரிகளின் உத்தரவின் படி உடனடியாக அந்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த தகவலை அந்நாட்டில் செய்திநிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

Related posts

ரஷ்யாவில் 3 இலட்சம் பேருக்கு கொரோனா

முழுமையான பாதுகாப்புக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி

பிறந்த 48 மணி நேரத்தில் குழந்தையை தாக்கியது கொரோனா