உள்நாடு

கடல் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது

(UTVNEWS | COLOMBO) – கடல் ஆமை இறைச்சியுடன் ஒருவரை பொலிஸார் மற்றும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கையைச் சுற்றியுள்ள கடலின் கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கடற்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் சுமார் 25 கிலோ கிராம் கடலாமை இறைச்சியுடன் சந்தேநகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 39 வயதான அதே பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடலாமை இறைச்சி மற்றும் சந்தேகநபர் மீது மேலதிக விசாரணைகள் பொலிஸ் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுகிறது.

Related posts

கொரோனா தொற்று : மேலும் 3 பேர் பாதிப்பு

துப்பாக்கிச் சூட்டு வழக்கு: நீதிபதி இளஞ்செழியன் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புடன் நீதிமன்ற வளாகத்தில்

சில பகுதிகளில் இன்று நீர்வெட்டு அமுலுக்கு