உள்நாடு

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு

(UTV|கொழும்பு) – நாட்டில் நிலவும் வறட்சியுடனான காலநிலை காரணமாக மின்னுற்பத்தி செய்யப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 56 வீதம், மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 65 வீதம், கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 57 வீதம், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 79 வீதம், ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 82 வீதமாகவும் காணப்படுவதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சளார் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மின்சாரத்திற்கான நாளாந்த கேள்வி அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மறு அறிவித்தல் வரும் வரை வெயாங்கொடவிற்கு ஊரடங்கு

பாராளுமன்ற மோதல் விவகாரம் – இறுதி தீர்மானம் இன்று.

பொருளாதார நெருக்கடியான காலத்திலும் ரணில் அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கினார் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

editor