உள்நாடு

மத்தள விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த திட்டம்

(UTV|கொழும்பு) – மத்தள விமான நிலையத்தை சர்வதேச விமானங்கள் வருகை தரும் விமான நிலையமாக மேம்படுத்துவதற்காக குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத் திட்டத்திற்கு உரிய பிரிவினரின் ஒத்துழைப்பை பெறுவது தொடர்பில் சகல விமான நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் கூறினார். சர்வதேச விமான நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக சந்திர ஸ்ரீ தெரிவித்துள்ளார்

கடந்த நான்கரை வருட காலப்பகுதியில் மத்தள விமான நிலையத்தின் மீது உரிய கவனம் செலுத்தப்படவில்லையென அவர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் விமான சேவைகள் அமைச்சரின் வழிகாட்டலின் கீழ் இந்த விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

இலங்கை ஆசிரியர் சங்கம் இன்றைய மின்வெட்டு தொடர்பில் கண்டனம்

1600 ஆக அதிகரித்த பொதுத் தேர்தல் முறைப்பாடுகள் – தேர்தல் ஆணைக்குழு

editor

வாழைச்சேனை பதற்றம் கட்டுப்பாட்டுக்குள்- சிறுவன் பலி