உள்நாடு

மாடியில் இருந்து விழுந்த சிறுவன் படுகாயம்

(UTV|கொழும்பு) – கொழும்பு நகரில் உள்ள தொடர்மாடி கட்டமொன்றின் இரண்டாம் மாடியில் இருந்து விழுந்து மாலைத்தீவைச் சேர்ந்த 03 வயது சிறுவன் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் கொழும்பில் உள்ள மாலைத்தீவுகள் தூதரகம் ஆகியவற்றை மேற்கோள் காட்டி அந்நாட்டு இணையதளமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அனைத்து புகையிரத சேவைகளும் இரத்து

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல விவாதம் பிற்போடப்பட்டது

‘மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்’ – சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை