(UTV|கொழும்பு) – சீனாவில் இருந்து இலங்கைக்கு வரும் கொள்கலன்களை சோதனை செய்யபோவதில்லை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் சுங்க திணைக்கள அதிகாரியுமான ஜெனரல் சுனில் ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய சீனாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படும் கொள்கலன்களில் கொரோனா வைரஸ் தொடர்பாக ஆராயும் தேவை தற்போதைக்கு இல்லை எனவும் கொள்கலன்களின் மூலம் வைரஸ் பரவும் தாக்கம் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.