(UTV|கொழும்பு) இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளாகவிருந்த மேலும் ஐந்து பேரை விடுவிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் ஐவரும் பாதுகாப்பு துறையை சேர்ந்தவர்கள் என்பதுடன், சிறிய குற்றங்களுக்காக சிறைத் தண்டனை வழங்கப்பட்டவர்கள் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் 512 கைதிகள் முன்னதாக விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.