உள்நாடு

பூஜித் ஜயசுந்தர முன்வைத்த மனுவின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி

(UTV|கொழும்பு) – கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர முன்வைத்த அடிப்படை உரிமை மனுவின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பெயரிடுவதற்கு உச்சநீதிமன்றம் இன்று(03) அனுமதி வழங்கியுள்ளது.

தனக்கு கட்டாய விடுறை வழங்குவதற்கு எடுத்த தீர்மானம் அரசியல் அமைப்புக்கு முரணானதென தெரிவித்து பூஜித் ஜயசுந்தர குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் குறித்த அடிப்படை உரிமை மனு மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

மனுதாரரின் தரப்பு மற்றும் சட்டமா அதிபர் முன்வைத்த விடயங்களை கவனத்திற்கொண்ட நீதிபதிகள் குழாம் எதிர்வரும் 26 ம் திகதி மனுவை ஆராய்வதற்து தீர்மானித்தது.

Related posts

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியைகள் நாளை!

சீனாவில் பரவிவரும் வைரஸ்; சுகாதார அமைச்சின் அறிவிப்பு

தபால் மூல வாக்களிப்பு – 3ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று