(UTV|சீனா) – சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 361ஆக உயர்ந்துள்ளதுடன், வைரஸ் தொற்றால் 17,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பெப்ரவரி 2ஆம் திகதி வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 361ஆக உயர்ந்துள்ளது. நேற்று(02) மட்டும் 57 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, சீனாவுக்கு வெளியே ஏனைய நாடுகளில் 100 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதோடு, பிலிப்பைன்ஸில் ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.