கேளிக்கை

கீர்த்தி சுரேஷின் புதிய திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

(UTV|இந்தியா) – நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள “மிஸ் இந்தியா” என்ற திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ள இந்த திரைப்படம் மார்ச் 6ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷின் 20ஆவது திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தை ஈஸ்ட் கோஸ்ட் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நரேந்திர நாத் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தனது காதல் குறித்து மனம்திறந்த நடிகை

நீண்ட இடைவெளிக்கு பிறகு சமந்தாவுக்கு டப்பிங் பேசிய சின்மயி…

38 வயதில் திருமணத்துக்கு தயாராகும் கவுசல்யா