(UTV|சீனா) – சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிலந்தவ்ரகுளின் எண்ணிக்கை 259 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை தினமும் உயர்ந்துகொண்டே செல்கிறது. அதேபோல வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளவர்களின் எண்ணிக்கையும் 11 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை உட்பட 20 நாடுகளுக்கு இந்த வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது. சீனாவில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்பியவர்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனமும் சீனாவின் கொரோனா வைரஸ் தாக்குதலை சர்வதேச சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கொரோனா வைரஸ் தாக்குதலை முறியடிப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும்.