(UTV|இந்தியா) – மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் “கர்ணன்” திரைப்படத்தில், கௌரி கிஷான் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட கதை என கூறப்படும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகை கௌரி கிஷான், ஏற்கனவே விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்த ’96’ படத்தில் குட்டி ஜானுவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.