உலகம்

அமெரிக்க ராணுவ விமான விபத்தில் 2 வீரர்கள் பலி

(UTV|அமெரிக்கா) – ஆப்கானிஸ்தானில் இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 2 வீரர்கள் உயிரிழந்ததாகவும், அவர்களின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அதே சமயம் எதிரிகளால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை’ எனவும் தெரிவிக்கப்பட்டுவுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள காஸ்னி மாகாணத்தில் தலிபான்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தெஹ் யாக் மாவட்டத்தில் E-11A என்ற இராணுவ விமானம் கடந்த திங்கட்கிழமை விபத்துக்குள்ளானது.

விமானம் தீ பிடித்தற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மலைகள் அதிகம் கொண்ட காஸ்னி மாகாணத்தில் குளிர் காரணமாக பனி படர்ந்துள்ளது. இதன் காரணமாக விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.

Related posts

நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம் – 10 பேர் பலி

உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கி வரும் நிதியுதவியை நிறுத்திய அமெரிக்க அதிபர்

பாதுகாப்பை உறுதி செய்ய தாக்குதல் அவசியம்