விளையாட்டு

தொடரை கைப்பற்றியது இந்தியா அணி

(UTV|நியூஸிலாந்து) – இந்திய அணிக்கும், நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது 20 க்கு 20 இந்தியா அணி பரபரப்பான சுப்பர் ஓவரில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை இந்தியா அணி 3-0 என்ற கணக்கில் கைபற்றியுள்ளது.

ஹெமில்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது ரோஹித் சர்மா 65 ஓட்டங்களையும், லோகேஷ் ராகுல் 27 ஓட்டங்களையும், சிவம் டுபே 3 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி 38 ஓட்டங்களையும் ஸ்ரேயஸ் ஐயர் 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து 180 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால் ஓட்ட இலக்கு சமநிலைப் பெற்றதால் சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது.

வெற்றியை தீர்மானிக்கும் சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 17 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

18 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியா அணி, வெற்றி இலக்கை கடந்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

இரு அணிகளுக்கிடையிலான நான்காவது ரி-20 போட்டி, எதிர்வரும் 31ஆம் திகதி வெலிங்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related posts

CSK அணியில் ஹர்பஜனும் கேள்விக்குறி

இந்தியா வெற்றி

உடற்தகுதி சோதனை : தோல்வியுறும் வீரர்களுக்கு 40 நாட்களுக்குள் காலக்கெடு