உள்நாடு

முக கவசத்திற்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்

(UTV|கொழும்பு) – முகத்தினை மறைக்கும் கவசத்திற்கான நிர்ணய விலை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, முக கவசத்தின் அதிகபட்ச சில்லரை விலை 15 ரூபாய் எனவும் சுவாச வடிகட்டி துகள்களுடன் கூடிய என் 95 ரக முக கவசத்தின் அதிகபட்ச சில்லரை விலை 150 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக அதிக விலைக்கு முக கவசங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் தீர்மானத்தின்படி ஒருமுறைப் பயன்படுத்தக்கூடிய முக கவசத்திற்கு அதிகபட்ச சில்லரை விலையை நிர்ணயிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, எந்தவொரு மருந்தகம் அல்லது விற்பனை நிலையங்களில் இவை கூடுதலான விலைக்கு இவை விற்பனை செய்யப்படுமாயின் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபை தீர்மானித்துள்ளது.

Related posts

கொவிட் தொற்றால் 43 பேர் பலி

கனடாவில் புகலிடம் கோரும் வெளிநாட்டவர்களை நாடு கடத்த ஏற்பாடு!

களுத்துறை மாவட்டத்தின் மற்றுமொரு கிராம உத்தியோகத்தர் பிரிவு முடக்கம்