கிசு கிசு

கொரோனா வைரஸ் : பாடசாலைகளின் நிலை ?

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸின் காரணமாக பாடசாலைகள் மூடப்படமாட்டாது இது தொடர்பில் எந்தவித தீர்மானமும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்று உயர் கல்வி அமைச்சரும், பதில் கல்வி அமைச்சருமாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை நிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சீனாவில் பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் குறித்து சமூக ஊடகங்களில் வெளிவரும் உண்மைக்கு புறம்பான மற்றும் போலியான விடயங்களில் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடும் கட்சிகள்?

ரணிலுடன் கைகோர்க்கும் ராஜிதா?

முக்கிய சதித்திட்டம் ஒன்றை வெளியிட தயார்- நாமல் குமார?