(UTV|கொழும்பு) – வௌ்ளைவேன் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இருவரிடமும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சுமார் 5 மணித்தியாலம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தங்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தனர்.
இதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சர்ச்சைக்குரிய வௌ்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இரண்டாம் நாளாகவும் நேற்று 11.30 குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.