உள்நாடு

நாட்டு மக்களுக்கு பிரதமர் வழங்கியுள்ள வாய்ப்பு

(UTV|கொழும்பு) – M.C.C. ஒப்பந்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை பெற்றுக் கொள்ள குறித்த ஒப்பந்தம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தீர்மானித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய அமைச்சரவையினால் குறித்த குழு நியமிக்கப்பட்டிருந்தது.

குறித்த ஒப்பந்தம் தொடர்பில் அதன் உள்ளடக்கம் மற்றும் அதனூடாக ஏற்படும் தாக்கம் தொடர்பில் நிறுவனத்திற்கோ, சங்கத்திற்கோ அல்லது தனி நபருக்கோ தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தலைவர் M.C.C. ஒப்பந்தம் தொடர்பில் ஆய்வு செய்யும் குழு, நெலும்பியச, அலரி மாளிகை, கொழும்பு 3 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது mccreview@pmoffice.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக கருத்துக்களை தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு

ஒரே நாளில் 57 பேருக்கு தொற்று

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அசாதாரண நிலையே ஏற்பட்டுள்ளது [VIDEO]