(UTV|பிரேசில்) – பிரேசிலில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறமையினால் நாட்டின் தென் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளம் காரணமாக இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட இனாஸ் ஜிராய்ஸ் மாகாணத்திலேயே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேவேளை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 18 பேர் மாயமாகி உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பிரேசிலின் மழை காரணமாக சுமார் 20,000க்கும் அதிகமான மக்கள் தங்கள் இல்லங்களிலிருந்து வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கனமழை காரணமாக பிரேசிலில் 99 நகரங்களில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.