(UTV| கொழும்பு) – இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தடகள வீரர் மில்கா சிங், பாக்ஸிங் வீராங்கனை மேரி கோம், கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி ஆகியோரது பயோபிக் வெளியாகி வசூலில் சாதனை படைத்தன.
தற்போது கபில்தேவ், மிதாலி ராஜ், சாய்னா நேவல், ஜூலன் கோஸ்வாமி போன்ற பிரபலங்களின் படங்கள் தயாராகி வருகின்றன.
இந்த வரிசையில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை படம் உருவாகிறது. இதனை சானியா மிர்சா சமீபத்திய பேட்டியில் உறுதி செய்துள்ளார்.
இப்படத்தை ரோனி ஸ்குருவாலா தயாரிக்க உள்ளார். இப்படத்தில் சானியா மிர்சா வேடத்தில் நடிக்க கரீனா கபூரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.