உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்றினைக் கண்டறிய தே.செ குழு நியமனம்

(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் தொற்றினைக் கண்டறிய தேசிய செயற்பாட்டு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தேசிய செயற்பாட்டுக் குழுவை நியமிக்குமாறு சுகாதார, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்று இலங்கைக்குள் பரவாமல் இருப்பதற்கும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பு வாய்ந்த குழுவினர் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அதற்கமைய பின்வருவோர் அடங்கிய குழுவை சுகாதார அமைச்சர் நியமித்துள்ளார்.

1.ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே

2.பத்ரானி ஜயவர்தன, சுகாதார செயலாளர்.

3. டொக்டர் அனில் ஜசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்.

4. மேலதிக செயலாளர் டொக்டர் சுனில் டி அல்விஸ்.

5.மேலதிக செயலாளர் வைத்தியலட்சுமி சோமதுங்க.

6. டொக்டர் நிஹால் ஜயதிலக.

7. விசேட வைத்தியர் அனுருத்த பதேனிய.

8. டொக்டர் பிரசன்ன குணசேன, மருந்துக் கூட்டுதாபனத்தின் தலைவர்.

9. மேலதிக செயலாளர் ஆனந்த விஜேவிக்ரம.

10. இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிகேடியர் டொக்டர் கிர்ஸாந்த பெர்னாண்டோ.

11. தொற்று நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர

12. டொக்டர் பபா பாலிஹவடன.

13. மருத்துவ ஆராய்ச்சி பிரிவின் டொக்டர் ஜயருவன் பண்டார.

14. விமான நிலைய நிறுவனத்தின் தலைவர் ஜி.ஏ.சந்திரசிறி.

15. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்தக் குழுவின் ஆலோசனைகளை மற்றும் செயற்றிட்டங்களை தெளிவுப்படுத்தும் விதமான விசேட கலந்துரையாடல் நாளை காலை 11 மணியளவில் சுகாதார அமைச்சில் விசேட வைத்தியர் அனில் ஜயசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாளை (19) நள்ளிரவு முதல் பணி புறக்கணிப்பு

ஹெரோயினுடன் குடு ரஜா கைது….

அலோசியஸ், பலிசேன பிணை வழக்கு 18 ஆம் திகதி…