உலகம்

சீனா மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது- ஜீ ஜின்பிங்

(UTVNEWS | CHINA) –கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதாகவும், இதனால் சீனா மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டிருப்பதாகவும் அந்நாட்டு ஜனாதிபதி ஜீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, இதுவரை 56 பேர் பலியாகியுள்ள நிலையில், சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ நிலைக்குழு கூட்டத்தில் (Politburo Standing Committee) பேசிய ஜீ ஜின்பிங், வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரசால், சீனா மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டிருப்பதாகவும், இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை வலுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்றும் கூறியுள்ளார்.

 

image

உறுதியான நம்பிக்கையுடன், ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்றி, நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் துல்லியமான கொள்கைகளை செயல்படுத்தினால், கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும் எனவும் ஜின்பிங் தெரிவித்துள்ளார்

Related posts

COVID – 19 தடுப்பூசிக்கு கனடாவும் அனுமதி

கொரோனா வைரஸ் : சவுதி அரேபியாவில் முதலாவது நபர் இனங்காணல்

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள எலான் மஸ்க்.