உலகம்

அவுஸ்ரேலியா தீயணைப்பு விமான விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பம்

(UTV|அவுஸ்ரேலியா) – அவுஸ்ரேலியாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க தீயணைப்பு விமானம் விபத்துக்குள்ளானமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காட்டுத் தீ பரவியுள்ள பகுதிகளில் மிக வேகமாக காற்று வீசி வருவதால் விமானம் விழுந்து நொறுங்கியதாகக் கருதப்பட்டாலும், முழுமையான விசாரணைக்குப் பிறகே விபத்துக்கான காரணம் குறித்து தெரியவரும் என்று அவுஸ்ரேலியா போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது.

சி-130 ஹெர்குலிஸ் ரகத்தைச் சேர்ந்த விமானம், காட்டூத் தீயை அணைப்பதற்கான வேதிப் பொருளை தூவிக் கொண்டிருந்தபோது, திடீரென வெடித்துச் சிதறியது. இதில், விமானத்திலிருந்த 3 அமெரிக்கர்களும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

கொரோனா பாதிப்பை கண்டறியும் புதிய கருவி

ஜப்பானில் அவரச நிலை நீக்கம்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது