கேளிக்கை

விஜய்யுடன் நடிக்க மறுத்துவிட்டார் ஸ்ரீ தேவியின் மகள்

(UTV|இந்தியா) – ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் விஜய் தேவர்கொண்டா நடிக்கவிருக்கும் பைட்டர்(fighter) படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்து வரும் நிலையில் அவர் தென்னிந்திய மொழிகளில் முதன் முதலாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாகவும் விஜய் தேவர்கொண்டா நடிக்கவிருக்கும் பைட்டர்(fighter) படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்திருந்தது.

இப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நடிகை ஜான்வி கபூர் அறிமுகமாகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதையடுத்து தற்போது இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. எனவே கூடிய விரைவில் இப்படத்தை குறித்த அதிகார்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஐஸ்வர்யா ராய்

சவுந்தர்யா ரஜினிகாந்த் தொழிலதிபரை மறுமணம்…

தளபதிக்கு சவால் விடுத்த தெலுங்கு நடிகர்