வணிகம்

அதிக எண்ணிக்கையிலான சீன சுற்றுலா பயணிகள் இலங்கை வருவர் – ஜோன் அமரதுங்க

(UDHAYAM, COLOMBO) – இந்த வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான சீன சுற்றுலா பயணிகள் இலங்கை வருவர் என எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

சீன சுற்றுலாத்துறையினருக்காக நாடளாவிய ரீதியாக விருந்தக வசதிகள் உட்பட சகல வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சீன உத்தியோகபூர்வ சின்ஹூவா ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

உலக வல்லரசுகளில் ஒன்றாக திகழும் சீன சுற்றுலாத்தரப்பினரை இலங்கைக்கு வரவழைப்பதில் இலங்கை சுற்றுலாத்துறையினர் ஆவலுடன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு ஏற்ற வகையில், இலங்கையர்கள் பலர் சீன மொழியினை கற்று வருவதாக தெரிவித்த அவர், இதன் மூலம் இலங்கையின் பாரம்பரிய பிரதேசங்களுக்கு விஜயத்தினை மேற்கொள்ளும் சீனர்கள் பல நன்மைகளை பெறுவர் எனவும் தெரிவித்தார்.

இது தவிர, சீனாவில் உள்ள முக்கிய நகரங்களில், இலங்கை சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையிலான பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டார்.

Related posts

அடுத்த மாதம் இந்திய ஆடைத்தொழிற்துறை கண்காட்சி கொழும்பில்…

நியாயமான விலைக்கு விவசாயிகளிடமிருந்து கிழங்குகளை பெற்றுக்கொள்ள சதொச ஆயத்தம்

அளவு அடிப்படையில் தேங்காய்க்கான நிர்ணய விலைக்கு முற்றுப்புள்ளி