வணிகம்

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு கொரிய அரசாங்கம் நிதியுதவி

(UTV|கொழும்பு) – சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக 10.96 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த தொகை இந்த வருடத்தில் வழங்கப்படும் என இலங்கைக்கான கொரிய தூதுவர் லியோன்லி தெரிவித்துள்ளார்.

குச்சவெளி சுற்றுலா வலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக 5.36 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளது.

மாத்தளை எடன் வல சமூக சேவை சுற்றுலா கிராம அபிவிருத்தி திட்டத்திற்காகவும் 5.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

சிறுபோகத்தில் நெல் அறுவடைகளை உரிய காலத்தில் மேற்கொள்வதில் சிக்கல்…

இன்றே UTV NEWS ALERT இனை செயற்படுத்த..

இலங்கை – சிங்கப்பூருக்கு இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்து