உள்நாடு

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

(UTV|கொழும்பு) – புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று(17) முதல் ஆரம்பமாகவுள்ளன.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டிற்கு பின்னர் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் காலப்பகுதியில் கட்சிகளை பதிவு செய்வது சட்டவிரோதமானது என்பதால், கடந்த காலங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

மொட்டு மேயருக்கு 3 வருட சிறை தண்டனை!

அழைப்பு விடுத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் – சீ.வீ. விக்னேஸ்வரன்

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு