உள்நாடு

மனு நிராகரிப்பு

(UTV|கொழும்பு) – கடத்தப்பட்டதாக கூறப்படும் ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜயவீரவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி அவரின் மனைவி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சட்டவலுவற்றதாக்க கோரி ரோஹண விஜயவீரவின் மனைவியால் இந்த னு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், நியாயமான காரணம் முன்வைக்கப்படாத காரணத்தினால். அந்த மனுவை நிராகரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வருடம் தீர்மானித்திருந்தது.

இந்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் எவ்வித சட்ட குறைபாடும் இல்லை என உயர்நீதிமன்றம் நேற்று தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பு நீலச் சமர் கிரிக்கெட் போட்டி- பார்வையிட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

ஜனாதிபதி நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு விஜயம்

பாராளுமன்றம் கலைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது